| 424 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இளவலுக்கு வாய்த்தஒரு வீரப் பாங்கும், எதிர்பொருவார் மனங்கவரும் எழில்வ னப்பும், பளபளக்கும் அவன்முகத்தில் தவழ்ந கைப்பும், பாய்ந்துவரும் அரிபோலும் அஞ்சா நோக்கும், களமுனைக்கு மதர்த்துவரும் பெருமி டுக்கும், கண்குளிரக் கண்டுளத்தில் மகிழ்ச்சி பொங்கும் அளவினுக்கோர் எல்லையில்லை; வலிய வேழன் அகமுருகி அவன்வயமாய் மொழிய லுற்றான்.394
மதர்த்து - செருக்கி |