பக்கம் எண் :

116கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

அரங்கினுக் கேற்ற பாடல்
       அகமகிழ் விக்கும் பாடல்
உரங்கொளும் வாழ்வுக் காக
       உயர்வழி நல்கும் பாடல்
தரங்களைப் பிரித்துக் காட்டித்
       தகவுற மொழிந்து, பேசும்
திறங்களும் எடுத்துச் சொல்லித்
       திருத்துவார் அவரை யெல்லாம். 23

ஆங்கிலங் கற்றோர் தாமே
       அமர்வதற் குரிய ரென்ற
பாங்கினில் ஒழுகும் நாட்டில்
       பைந்தமிழ் தேர்ந்த செம்மல்
ஓங்குபே ராசா னாகி
       உயர்பெரும் பொறுப்பைத் தாங்கி
ஈங்கினி தாட்சி செய்தார்
       இணையிலை என்னு மாறே. 24

நிறைதரு புலமை யாட்சி
       நீடிய புகழின் மாட்சி
குறியுடன் பதவி யாளுங்
       கூர்மதி யனைத்தும் நோக்கி
1அரசரும் வியந்து போற்றி
       அன்பினைப் பொழிந்து நின்றார்;
அறிவுடை ஒருவன் தன்னை
       அரசனும் விரும்பும் அன்றே! 25

பண்டுநற் புலவர் தம்மைப்
       பாருல காண்ட வேந்தர்
கண்டுளத் தன்பு பூண்டு
       காத்தனர் தமிழுக் காக;
பண்டித மணியை எங்கள்
       பைந்தமிழ்ப் புலவர் தம்மைக்
கண்டுளத்2 தரசர் தாமும்
       காத்தனர் தமிழுக் காக. 26


1.செட்டிநாட்டரசர், 2.கற்கண்டு போன்ற உள்ளம்