பக்கம் எண் :

122கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

ஆங்கிலங் கற்றவர் ஆர்வலர்
       தீந்தமிழ் ஆய்ந்திடவே
ஓங்கிய தில்லையில் ஓர்கழ
       கங்கண் டுயர்வுபெறும்
பாங்கினில் ஞாயிறு தோறும்
       புகட்டினர் பாலமுது
தேங்கிய நற்சிலம் பாகிய
       தேனினைப் பண்டிதரே. 20

ஆசான் பணியிடை ஓய்வே
       பெறினும் அமைதியுடன்
பேசா திருந்திலர் பெற்றநல்
       லின்பம் பிறர்பெறவே
ஏசாச் சிறப்பின் எழில்1 ராம
       சாமி எனுமவர்க்குக்
காசாற் பெறவிய லாத
       கலையெழில் காட்டினரே. 21

பெண்பாலர் கல்விபெறப் பேரறிவு
       பெற்றொளிரப் பெரிதும் எண்ணிக்
கண்போலும் அவர்தமக்குக் குருகுலமும்
       காணவழி கட்டு ரைத்தார்
பண்பாரும் கொப்பனா பட்டியெனும்
       பதிவளர்மெய் யப்பர் தம்மால்
நண்பாலே கலைமகள்கல் லூரியென
       நாட்டுவித்தார் மணியார் அங்கே. 22

ஒருநாள் மகிபாலன் பட்டிக்குள் ளுற்றார்
மறுநாளும் வந்துசெல மற்றும் மனம்விழையார்
கற்றாழை கள்ளி கருநாகம் புக்குவரும்
புற்றாலே எங்கும் பொலிந்திருக்கும்; வான்முகில் தான்
சற்றே பொழியின் சகதி நிறைந்திருக்கும் 5
பற்றாக் குறைக்கங்குப் பள்ளம் படுகுழிகள்;
ஆற்றில் புனலும் அடித்துத் திரண்டுவரும்


1.பண்டிதமணியின் இல்லிற் கெதிரில் வாழ்ந்த தமிழன்பர் சி.இராமசாமிச் செட்டியார்.