பக்கம் எண் :

152கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

1ஊன்றுகோள் நமது ளத்தில்
       ஒவ்வொன்றும் மணிகளாகும்;
ஊன்றிநாம் எண்ணி யெண்ணி
       உருப்பெற உழைத்தல் வேண்டும். 7

‘அயன்மொழிப் பயிற்சி அன்னை
       மொழியிடம் அன்பைக் கூட்டப்
பயன்படும் எனினும் இந்தி
       பயின்றிட வற்பு றுத்தின்
இயல்பினிற் றமிழ்வ ளர்ச்சி
       தடைப்படும் ஏற்றங் குன்றும்
மயலுளார் திணிப்ப ராயின்
       வருபயன் இல்லை’ என்றார். 8

‘உரியதன் மொழியில் ஆக்கம்
       உயர்ந்திட ஓம்பிக் காத்துத்
தெரிதருஞ் சுவையை மாந்தத்
       தெரிகிலா நாடு தானும்
பெரியதே எனினும் யாவும்
       பின்னடைந் தழியும்; உள்ள
பெருமையுந் தேயும்’ என்றே
       பேசினர் மதியா லாய்ந்து. 9

‘தாய்மொழி என்று சொல்லும்
       தனிமொழி எதுவோ அந்தத்
தூய்மொழி வாயி லாகத்
       தொடங்கிடும் கல்வி தன்னைச்
சேய்களும் முதற்கண் கற்றுத்
       தெளிந்திடல் வேண்டும் இன்றேல்
தேய்வுறும் அறி’வென் றெண்ணித்
       தேர்ந்தவர் தெளிந்து சொன்னார். 10


1.ஊண்றிய கொள்கை