பக்கம் எண் :

இளம்பெருவழுதி203

 
கடம்பன்: கனவினும் அதுதான் கைவரப் பெறாது
தொல்லையிற் சிக்குவர் துணிந்தனர் போலும்;
பாண்டியன்:எள்ளுதல் தவிர்க முள்மரம் முளையிற்
கிள்ளுதல் நன்று . . . . . . . .
கடம்பன்:. . . . . . . . . .வெள்வே லுடையாய்
நிலைப்படை ஆங்காங் கெல்லையில் நின்றுள
தலைப்படின் அவன்றான் தப்புத லரிது;
பாண்டியன்:விழிப்புட னிருத்தல் வெல்போர்க் கடம்பன்
தொழிற்கது துணைசெயும் . . . . . . .
கடம்பன்:. . . . . . . . தொழுதுமேற் கொள்ளுவேன்
செம்புலச்:மற்றுமோர் செய்தி மனத்திற் கொள்ளுக
கத்து கடல்குழ் காழகன் சீயன்
இற்றை நாள்வரை இறைதரும் இயல்பினன்
உரிமை வேண்டி உருத்தெழு வான்போல்
திரிந்துளன் எனவும் செப்பக் கேட்டனம்;
நாகனார்:கார்முகில் சூழிற் கழனிகள் விளையும்
போர்முகில் சூழிற் பூவுல கழியும்;
கணியன்:எடுப்பதுங் கெடுப்பதும் இருமுகிற் குரிய;
நாகனார்:இடித்துரை கூறுதல் எம்மனோர்க் குரித்து;
பாண்டியன்:கூறுக யாமுந் தலைமேற் கொள்ளுதும்
மாறுகொண் டெழுதல் மற்றவர் தாமே;
கடம்பன்:போர்மேற் கொள்வோர் புறமிட் டோடத்
தார்தாங் கணியினர்நம் தாயகத் துள்ளனர்;
பாண்டியன்:நன்று நன்று மேவுக நலமே.