பக்கம் எண் :

இளம்பெருவழுதி207

பாண்டியன்:(புலவரை நோக்கி)
தன்மகன் தக்கான் எனப்பிறர் சாற்றில்
அன்னை மகிழ்விற் களவிலை; விழிப்புனல்
அருவியிற் பெரிதென அறிந்தனம் இன்று;
மாதேவி:(புலவரை நோக்கி)
மகள்புகழ் கேட்ட மன்னர் மனத்துள்
துன்னிய மகிழ்வு தோன்றுமா றிலதோ?
அரசுறு களிப்பில் அரைப்பங் கெனக்கு
முரசொலி முழக்கிலோ முழுப்பங் கவர்க்கு;
பாண்டியன்:(புலவரை நோக்கி)
செங்களம் வெறுக்கும் மங்கைய ருளத்தை
இங்கொரு குறிப்பால் இயம்புதல் காண்மின்;
பேதையர் கொழுநர்ப் பிரித லாற்றா
மாதர் ஆதலின் மகிழ்வவர்க் கேது?
மாதேவி:வெற்றி தோல்வி வேண்டும் நில்லா;
சுற்றிச் சுற்றிச் சுழலுந் தகைய;
மாளலும் மீளலும் மற்றோ ரன்ன;
மீளுங் காறுங் கேளிர்ப் பிரிந்தோர்
மகிழ்வுறல் யாங்ஙனம்? மனத்துட் பெருந்துயர்
ஆகும் ஆதலின் அவர்விழி புனல்தரூஉம்;
பாண்டியன்:மண்டமர் வேட்டு, மாளல் அஞ்சாது
புண்டாழ் குருதிப் புனலிற் றிளைத்தல்
திண்டோள் மன்னர்க்குத் தண்டா விருப்பாம்;
நாகனார்:மறப்போர் புரிதல் மன்னர்க் குகந்தது;
இறப்போர் தொகையோ எண்கள் இகந்தது;
பாண்டியன்:இறப்போர் தொகையை எண்ணுவ மாகிற்
சிறப்புஞ் சீரும் சேர்வ தியாங்ஙனம்?
நாகனார்:பொருள்பாழ் உயிர்பாழ் புகையும் பகையால்
அருள்பாழ் இந்நிலை யறிவார் யாரே?
பெண்மை யுளமேஅப் பெற்றிமை யுணரும்;