பக்கம் எண் :

208கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

பாண்டியன்:போரின் நிகழ்வாற் பொருள்கள் பாழென
யாரும் அறிகுவர்; யாமும் அஃதே;
படையெனும் உறுப்புப் பார்நலங் காக்கும்
நடைமுறைக் குரியது; நண்ணார் படையெழிற்
செங்கள மன்றி எங்குள தொருவழி?
நாகனார்:மண்ணாள் வேந்தர் மற்றவர் தம்மை
நண்ணார் எனமனத் தெண்ணா ராகின்
நண்ணா தாகும் நடுக்கிடும் போரே;
போரிற் பாழ்படும் பொருளிற் பாதி
பாரில் வாழ்நர்க்குப் பயன்படு மாகில்
நல்குர வென்னும் சொல்லே யிலதாம்;
பாண்டியன்:பாட்டின் கற்பனை கேட்டற் கினியது
நாட்டின் காவல் நடைமுறைக் குரியது;
நாகனார்:பாடல் சொலும்பொருட் பற்றுதல் கொளாஅது
கூடலர் எனப்பகை கொளுமேல் யாண்டும்
நாடும் ஏடும் நனிவே றாகும்;
நாடிய அன்பே நலந்தரும் வாழியாம்;
மறப்போர் மறப்போர் மாநிலங் காக்குந்
திறத்தோர் அல்லர் செந்தமிழ் வல்லீர்
பாண்டியன்:மெல்லில் மனத்தைச் சொல்லினம் நும்முழை
பல்கிய அறவுரை பகருதிர் நீவிர்;
நாகனார்:பொலந்தார் மார்ப புகழ்ச்சி வேண்டிக்
கலந்தோர்க் குறுதி கழறுதல் தவிர்த்து
மெய்ம்மை விடுத்துப் பொய்ம்மை கிளத்தல்
எய்யா தாகின் றெம்சிறு செந்நா;
பாண்டியன்:எம்செவி கைப்பினும் நும்செவி யறிவுறூஉ
நெஞ்சிற் கொடூஉம் நீர்மையேம் அறிகுவிர்;
  நனைமொழி நும்பால் நவின்றனம் அவைதாம்
தகவில எனின்அவை தவிர்க பெரியீர்