36 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
1 கதிரெழு காதை உலகெலாம் உய்ய வைக்கும் உயரிய கொள்கை யாவும் நிலவிய தொகையும் பாட்டும் நிகழ்த்திய சங்கம் ஏறி அலகிலாப் பெருமை பூண்டாள் அன்னையாம் தமிழ ணங்கின் மலருலாம் அடிகள் வாழ்த்தி மகிழ்வுற மனத்துள் வைப்பாம் 1 யாதும்நம் ஊரே யாகும் யாவருங் கேளிர் என்னும் கோதிலாக் கொள்கை முற்றுங் குறித்திடும் பாட லொன்றை, ஓதுவார் உள்ள மெல்லாம் உவந்துவந் தேத்தும் வண்ணம் ஓதினான் 1கணியன் என்னும் ஒப்பிலாச் சங்கச் சான்றோன் 2 விரிமனக் கொள்கை யெல்லாம் விரித்திடுஞ் சங்கப் பாட்டுக் குரியவன் கணியன் என்னும் ஒருதனிப் புலவ னான குரிசிலை உலகம் போற்றக் கொடுத்தது தமிழ்ப்பூங் குன்றம் சிறியதே எனினும் மிக்க சிறப்பினாற் பெரிய தாகும் 3
1.கணியன் பூங்குன்றனார். |