வரும்பகை யனைத்துந் தாங்கி வளர்தமிழ் மொழிக்கோர் ஆக்கம் அரும்புதல் காணின் ஆங்கே அல்லலும் அணுகு மாபோல் பெருங்கதிர் மணியைப் பாழ்நோய் பிடித்தது மூன்றாம் ஆண்டில் 1இரும்படர் தந்த நோயை இளம்பிள்ளை வாதம் என்றார் 20 செஞ்சுடர்ப் பரிதி கண்டோர் சிந்தையுள் மகிழுங் காலை அஞ்சிடு மாறு வாழ்வில் ஆரிருள் படர்ந்த தம்மா! பிஞ்சினைப் பற்றும் நோயாற் பெற்றவர் நைந்து நொந்த நெஞ்சின ராகி நாளும் நெடிதுயிர்த் தங்கு வாழ்ந்தார் 21 காற்குறை யதனைக் கண்டு கலங்கின ரேனும் பெற்றோர் மேற்குறை நேரா வண்ணம் விழிப்புடன் காத்து வந்தார் பார்க்குரை செய்ய வல்ல பண்டித மணியா வாரென் றார்க்கது தெரியும்? காலம் ஆக்கிடும் செயல்தான் என்னே! 22
1.பெருந்துயர், |