பக்கம் எண் :

44கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

இருமொழி வல்ல ரானார்
       இனியசொல் வல்ல ரானார்
உரைசெய உரிய ரானார்
       உயர்கவி தருவ ரானார்
பொருள்நயம் தெரிய லானார்
       புகழும்நூல் வரைய லானார்
வருமிவை திங்கள் ஏழில்
       எவ்வணம் வாய்த்த வம்மா! 8

ஒருமையிற் கற்ற கல்வி
       உதவிடும் எழுமை என்ற
மறைமொழி புகன்ற வாய்மை
       மறைமொழி யாகா தன்றோ?
1. தெரிதரும் முன்னை நூல்கள்
       தெளிவுறக் கற்கும் போது
பரிவுடன் பழைய பாடம்
       படிப்பபோல் இருந்த’ தென்றார் 9

திண்ணையில் அமைந்த பள்ளி
       திருத்திடும் ஆசாற் சார்ந்தங்
கெண்ணுடன் எழுத்துங் கற்கும்
       இளையநற் பருவத் தாரைக்
கண்ணெனும் வணிக நோக்கில்,
       கலத்தினிற் செலவி டுத்தல்
பண்ணுயர் செட்டி நாட்டுப்
       பழங்குடி வழக்க மாகும் 10

வணிகர்தம் குலத்து வந்த
       வழக்கினால் இலங்கை யென்னும்
அணிநகர்க் குய்த்து வைத்தார்
       அக்கதி ரேசன் தந்தை;
பணியினை ஏற்ற பிள்ளை;
       பதினோராண் டகவை கொண்டான்,
துணிபகர் கடையில் அந்தத்
       துய்யவன் பணிமேற் கொண்டான் 11


1.பண்டித மணியார் கூற்று