முத்தமிழ் அளக்க வல்ல முழுமதி பெறுவான் அங்கே அத்துணி அளந்து விற்றான் அவன்நிலை யாரே கண்டார் புத்தகம் எழுதுங் கையால் புதுத்துணி மடித்துத் தந்தான் 1பத்துடன் தொகையைச் சொல்வான் பணத்தொகை விலையைச் சொன்னான் 12 தொகைஎனும் நூல்சொல் வாயால் துணித்தொகை பகர்ந்த போதும் தகுதியின் மிக்க சான்றோர் தம்முடன் பழகி வந்தான் வகைபடு துணிக ளெல்லாம் வாணிகம் செய்யும் போதும் அகமொரு தனித்த போக்கை அவாவியே சென்ற தங்கே 13 துணிகளைக் கைகள் பற்றும் தூய்மையை நெஞ்சம் பற்றும் 1அணிகலை விழிகள் நோக்கும் 2அணிகளை உள்ளம் நோக்கும் துணிநயம் விரல்கள் பார்க்கும் சொல்நயம் சிந்தை பார்க்கும் மணியவன் நினைவு முற்றும் மற்றுமோர் உலகிற் செல்லும் 14 நடந்தன ஆண்டு மூன்று நயந்துணி விலைகள் பேசித் தொடர்ந்தது விற்கும் செய்கை துணிபடு மாறு, தந்தை
2.பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும். 1.அணியும் ஆடை (யை), 2.உவமை முதலான அணிகளை |