46 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
கடந்தனர் வாழ்வை என்ற கடுந்துயர் தருஞ்சொற் கேட்டுப் படர்ந்தனன் விரைந்து தன்னைப் படைத்ததாய் நாட்டை நோக்கி 15 தந்தைதாம் பிரிந்தார், ஆனால் தமிழெனும் தாயைக் காக்க வந்திவண் தங்கி விட்டான் வாழ்வுக்கு வழியைத் தேடிச் சிந்தையைப் பறக்க விட்டான் சிலபகல் கழிந்த பின்னர் வந்தது மீண்டும் வாதம் பறந்திட வழியே யில்லை 16 முற்றிய வாத நோய்தான் முழுவலி கொண்டு தாக்க வற்றிய காலைப் பெற்றான் வளர்கதி ரேசன் அந்தோ! பெற்றவள் அதனைக் கண்டு பெருந்துயர் உற்றா ளேனும் பற்றுளங் குறைய வில்லை பரிவினைச் சொரிந்து நின்றாள் 17 ஈன்றவள் மனத்திற் கொண்ட இடரினைப் போக்கு தற்கோ 1நான்றகால் தளர்ச்சி போக்கி நன்கனம் நடப்ப தற்கோ ஊன்றுகோல் ஒன்று பற்றி உரத்துடன் நிமிர்ந்து நின்றான் சான்றவர் போற்று மாறு தண்டுகொண் டங்கு நின்றான் 18
1.தொங்கிய. |