62 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
4 மணம் புணர் காதை ஆண்டுபதின் மூன்றானால் ஆடவர்தம் திருமணத்தை அதற்கப் பாலும் தாண்டவிட மாட்டார்கள் தனவணிகர் வழக்கமிது; மரபின் கொள்கை பூண்டொழுகும் குலத்துவரும் பூங்குன்றப் புலவருக்கோ முப்பான் ஆண்டு தாண்டியுமப் பேற்றுக்குத் தகுதிதர அக்குலத்தார் தள்ளி நின்றார் 1 நூலொன்றும் பொருளுணர்ந்து நயமுணர்ந்து நுவல்கின்ற நிறைபு லத்தார் காலொன்றுங் குறையறிந்து பெண்கொடுக்கக் கருதுபவர் எவரு மில்லை; வேலொன்று தருபுண்ணில் வெந்தழல்தான் வீழ்வதுபோல் வெந்து நொந்து நாளொன்று வாராதோ எனக்கலங்கி நலிந்துழன்றார் அவரை ஈன்றார் 2 குலம்பார்ப்பர், குவிசெல்வ வளம்பார்ப்பர், குடிபார்ப்பர், சீரும் பார்ப்பர், நலம்பார்ப்பர், கலன்பார்ப்பர், நடந்துவரும் நடைபார்ப்பர், உடையும் பார்ப்பர், நிலம்பார்ப்பர், நாகரிக மனைபார்ப்பர், நிகழ்மணத்தில் அறிவு, பண்பு நலம்பார்க்கும் நிலைமட்டும் மறந்திடுவர் நகரத்தார் நிலைதான் என்னே! 3 |