68 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
உலகியல் நன்கு தேர்ந்தார் இவரைப்போல ஒருவ ரில்லை; கலைபயில் அறிவும் அந்த உலகிய லறிவுங் கண்டோர் துலையினில் தூக்கிப் பார்ப்பின் மிக்கது தோன்றா ராக அலைபடும் மனத்த ராவார்; அவ்வணம் தெளிந்து நின்றார் 24 மேற்கணக்காய்க் கீழ்க்கணக்காய் மேவுபதி னெண்கணக்குங் கற்றுத் தேர்ந்தார்; பார்த்தலத்தில் வரவுபற்றுப் பார்க்கின்ற பணக்கணக்குங் கற்றுத் தேர்ந்தார்; மேற்புலத்தாற் றெளிவுபெறல், மிகுதிருவால் மேம்படுதல் வெவ்வே றென்ற 1நூற்கணக்கை மாற்றிவைத்த இவர்திறத்தை நுண்ணறிவை வியவார் யாரோ? 25
1.இருவேறுலகத்தியற்கை என்ற குறளின் கருத்தை. |