பக்கம் எண் :

82கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

7
வழக்காடு காதை

‘கலையறி வார்ந்த நெஞ்சிற்
       கருவுறும் கவிதை எண்ணம்,
புலமையிற் செறிந்த பாடல்
       புதல்வனாய் வந்து தோன்றும்,
கலையது கருக்கொள் ளாராய்க்
       கருவினை உயிர்க்க எண்ணின்
நலமுறும் மகவா தோன்றும்?
       நகைப்பன்றோ வந்து தோன்றும்!’ 1

‘நிறைபுலம் செழிக்கப் பெற்றோர்
       நிலையுறும் பாடல் யாக்கும்
முறைகளும் தெரிதல் வேண்டும்
       முற்றிய புலமை என்றால்
நெறிபிற ழாத பாடல்
       நெய்திடுந் திறமை வேண்டும்,
நெறிபெறுந் தமிழ்த் தொண் டாக
       நினைத்திதைச் செய்க’ என்பார், 2

பிழைபடப் பாடல் யாத்தல்
       பீடுயர் தமிழ்மொ ழிக்கே
அழிவிலாப் பழியை ஆக்கும்
       ஆதலின் நண்ப ரேனும்
வழுவுறும் பாடலொ ன்றை
       வடிப்பினும் வெகுண்டு ரைப்பார்
‘இழிவுறும் செயலைச் செய்ய 3
       இனியும்நீர் முயலேல்’ என்பார்.