பக்கம் எண் :

88கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

நூலுக்குள் அவர்நுழைந்து திளைத்து வந்து
       நுவலுங்காற் சொல்லுக்குச் சொல்லி னிக்கும்
பாலுக்குள் மறைந்திருக்கும் நெய்யைப் போலப்
       பாட்டுக்குட் புதைந்திருக்கும் நயங்க ளெல்லாம்
மேலுக்கு வந்தின்பம் நல்கும் வண்ணம்
       மேடையிலே சொன்மழையைப் பொழிந்தி ருப்பார்
1தாலுக்குள் தமிழ்எழிலின் நடனங் கண்டு
       தமைமறந்து செவிமடுப்பர் அவையோர் நன்றே. 4

பல்வரிசை யில்லாத வாய்ம லர்ந்து
       பாட்டுரைத்துப் பொருளுரைத்து நயமு ரைக்கும்
சொல்வரிசை, நூலுக்குள் தோய்ந்து தோய்ந்து
       சுடர்விடும்நற் றமிழ்ப்புலமைப் பெருக்கைக் காட்டும்;
சொல்லியநல் வாயிதழில் தவழ்ந்து மின்னித்
       தொடர்ந்திருக்கும் புன்னகைதான், பாட்ட ணங்கின்
மெல்லியநல் லிதழ்சுவைத்துச் சுவைத்துக் கண்ட
       மேலான இன்பத்தின் களிப்பைக் காட்டும். 5

சிரிப்பிருக்கும் அவர்வாயில் பேசுங் காலை
       சிந்தனையின் தெளிவிருக்கும் அவர்மு கத்தில்;
விரித்திருக்கும் ஒளியிருக்கும் விழியி ரண்டில்;
       விரிநெற்றி பொலிவுபெற நீறி ருக்கும்;
பருத்திருக்கும் கழியினைக்கை பிடித்தி ருக்கும்;
       பளபளக்கும் அக்கழியில் பூணி ருக்கும்;
விரித்திருக்கும் நீள்விரிப்பில் அமர்ந்தி ருப்போர்
       விழிகளுக்குள் வியப்பிருக்கும் களிப்பி ருக்கும். 6

பொன்விசிறி மடிப்பொன்று தோளின் மீது
       புரண்டிருக்கும்; வடமொழியும் பயின்றா ரேனும்
மின்முகிலிற் பொழியுங்கால் அயல்மொ ழிச்சொல்
       மேவாத தமிழிருக்கும்; பிறர்க ருத்தை
முன்னியல்பின் எள்ளலொடு மறுக்குங் காலை
       முனைமழுங்காக் கூர்ப்பிருக்கும்; இனித மர்ந்து
நன்மணியார் 1நிற்காது பேசு கின்ற
       நாவன்மை கண்டுலகம் போற்றி நிற்கும். 7


1.தால் - நா. 1.தடையின்றி. (நின்று பேசாமையையும் குறிக்கும்.