100 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
இவ்வாறு, அல்வழி வினைத்தொகையில் யகர, ரகர, ழகர மெய்களின் மூன் வரும் க, ச, த, பக்கள் இயல்பாகும். (பண்புத்தொகை - மிகுதல்) மெய்+கீர்த்தி = மெய்க்கீர்த்தி கார்+பருவம்=கார்ப்பருவம் யாழ்+கருவி=யாழ்க்கருவி இவ்வாறு, அல்வழிப் பண்புத்தொகையில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் மிகும். (உவமைத்தொகை - மிகுதல்) வேய்+தோள்=வேய்த்தேர்ள் கார்+குழல்=கார்க்குழல் காழ்+படிவம்=காழ்ப்படிவம் இவ்வாறு, அல்வழிப் உவமைத்தொகையில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் மிகும். (யகரவீற்று வினையெச்சம்-மிகுதல்) போய்+கொண்டான்-போய்க் கொண்டான் இவ்வாறு, யகரவீற்று வினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும். (ரகரவீற்று வினையெச்சம்-இயல்பு) உண்ணியர்+போவான்=உண்ணியர்போவான் இவ்வாறு, ரகவீற்று வினையெச்சத்தின்முன் வரும் வல்லி னம் இயல்பாகும். (வேற்றுமையில் வலிமிகல்) நாய்+கால்=நாய்க்கால் தேர்+தலை=தேர்த்தலை யாழ்+கோடு= யாழ்க்கோடு |