ணகரமாகவும், னகரமாகவும் திரியும் பொழுது, நிலைமொழி ணகர, னகர ஈறுகள் கெட்டுப் புணரும். இலக்கண விதி: குறில் ஒன்றனையும் சாராது, ஒருமொழி தொடர் மொழிகளைச் சார்ந்த ணகர, னகர ஈறுகள், வருமொழிக்கு முதலாக வந்த நகரம் மயக்கவிதி இன்மையினாலே திரிந்தவிடத்துத் தாம் கெடுதலைப் பொருந்தும். குறிலணை வில்லா ணனக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே. (ந-நூற்பா 210.) 2. யகர, ரகர, ழகர ஈற்றுப்புணர்ச்சி (அல்வழி) (எழுவாய்த்தொடர்-இயல்பு) வேய்+குறிது=வேய்குறிது வேர்+சிறிது=வேர்சிறிது யாழ்+பெரிது= யாழ்பெரிது இவ்வாறு, அல்வழி எழுவாய்த் தொடரில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க,ச,த,பக்கள் இயல்பாகும். (உம்மைத்தொகை-இயல்பு) பேய்+பூதம்=பேய்பூதம் நீர்+கானல்=நீர்க்கானல் இகழ்+புகழ்=இகழ்புகழ் இவ்வாறு, அல்வழி உம்மைத் தொகையில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் இயல்பாகும். (வினைத்தொகை-இயல்பு) செய்+கடன்=செய்கடன் தேர்+பொருள்=தேர்பொருள் வீழ்+புனல்=வீழ்புனல் |