98 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
இவ்வாறு, அல்வழியிலே, இடையினம் வரின், ணகர, னகர ஈறுகள் இயல்பாகும். (கண்+பொறி-கட்பொறி எனப் பண்புத் தொகையிலும், பொன்+சுணங்கு=பொற்சுணங்கு என உவமைத்தொகையிலும் அல்வழியில், ஒரோவழி ணகர, னகர ஈறுகள் திரிதல் உண்டு. மண்+சுமந்தான்=மண் சுமந்தான், பொன்+சுமந்தான் =பொன் சுமந்தான் என வேற்றுமையிலே, வருமொழி வினை யாயின், ஈறுகள் திரியாமல் ஒரோவழி இயல்பாதல் உண்டு.) இலக்கண விதி:ணகர, னகர ஈறுகள் வேற்றுமைப் புணர்ச்சியிலே வருமொழி முதலில் வல்லினம் வரின், ண்-ட் ஆகவும், ன்-ற் ஆகவும் திரியும்; மெல்லினமும் இடையினமும் வந்து புணரில் இயல்பாகும். அல்வரிப புணர்ச்சியிலே மூவின மெய்கள் வரினும் இயல்பாகும். ணனவல் லினம்வரட் டறவும் பிறவரின் இயல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக் கனைத்துமெய் வரினு மியல்பா கும்மே (ந-நூற்பா 209.) குறிலணைவில்லா ணகர, னகர ஈறுகள் (அல்வழி) தூண்+நன்று=தூணன்றுபசுமண்+நன்று=பசுமணன்று அரசன்+நல்லன்=அரசனல்லன் செம்பொன்+நன்று = செம்பொனன்று (வேற்றுமை) தூண்+நன்மை=தூணன்மை பசுமண் + நன்று = பசுமணன்மை அரசன்+நன்மை=அரசனன்மை செம்பொன்+நன்மை = செம்பொனன்மை இவ்வாறு, அல்வழியிலும், வேற்றுமையிலும் தனிக்குறிலைச் சாராத ணகர, னகர ஈறுகளின் முன் வருகின்ற நகரம், முறையே |