பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்101

இவ்வாறு, வேற்றுமையிலே யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் மிகும்.

(வேற்றுமையில் இனத்தோடு உறழ்தல்)

வேய்+குழல்=வேய்க்குழல், வேய்ங்குழல்

ஆர்+கோடு=ஆர்க்கோடு, ஆர்ங்கோடு

பாழ்+தூறுஷ=பாழ்த்தூறு, பாழ்ந்தூறு

இவ்வாறு, வேற்றுமையிலே யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் ஒருகால்மிக்கும், ஒருகால் இனமெல்லினத் தோடு உறழ்ந்தும் வரும்.

நன்னூல் நூற்பாவுள் (224) ‘மேல்’ என்ற மிகை விதிப்படி, வேற்றுமையில் இயல்பாதலும், அல்வழியில் உறழ்லும், தனிக் குறிலைச் சாராத யகரத்தின் முன் யகரம் வரின், அல்வழி வேற்றுமை இருவழியிலும் நிலைமொழி யகரங்கெடுதலும் கொள்ளுதல் வேண்டும்.

(வேற்றுமையில் இயல்பாதல்)

வாய்+புகுவது=வாய்புகுவது

இங்கு, வேற்றுமையில் இயல்பாயிற்று.

(அல்வழியில் உறழ்தல்)

பாழ்+கிணறு=பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு

இங்க அல்வழிப் பண்புத்தொகையுள் உறழ்ந்து வந்துள்ளது.

(அல்வழியில்-யகரம் கெடுதல்)

காய்+யாது=காயாது

இங்க, அல்வழியில் நிலைமொழி இறுதியகரம் கெட்டது.

(வேற்றுமையில்-யகரம் கெடுதல்)

நோய்+யானை=நோயானை

இங்கு, வேற்றுமையில் நிலைமொழி இறுதி யகரம் கெட்டது.