பக்கம் எண் :

102கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

இலக்கண விதி: யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் வரின் அல்வழியில் இயல்பாயும் மிக்கும் புணரும். வேற்றுமையில் மிக்கும், வல்லினத்திற்கு இனமான மெல்லினம் உறழ்ந்தும் புணரும்.

யரழ முன்னர்க் கசதப வல்வழி
இயல்பு மிகலு மாகும் வேற்றுமை
மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல்

(ந-நூற்பா 224.)

3. லகர, ளகர ஈற்றுப்புணர்ச்சி

(வேற்றுமை)

கல்+குறை=கற்குறை

முள்+குறை=முட்குறை

இவ்வாறு, வேற்றுமையிலே லகர, ளகர மெய்களின் முன் வல்லினம் வரின், லகரம் றகரமாகவும், ளகரம் டகரமாகவும் திரியும்.

(அல்வழி)

கல்+குறிது=கல்குறிது, குற்குறிது

முள்+குறிது=முள்குறிது, முட்குறிது

இவ்வாறு, அல்வழியிலே லகர, ளகர மெய்களின்முன் வல்லினம் வரின், ஒருகால் இயல்பாகியும் ஒருகால் திரிந்தும் வரும்.

(வேற்றுமை)

கல்+மாட்சி=கன்மாட்சி

முள்+மாட்சி=முண்மாட்சி

இவ்வாறு வேற்றுமையிலே லகர,ளகர மெய்களின் முன் மெல்லினம் வரின், லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரியும்.