பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்103

(அல்வழி)

கல்+மாண்டது=கண்மாண்டது

முள்+மாண்டது= முண்மாண்டது

இவ்வாறு அவ்வழியில் லகர,ளகர மெய்களின் முன் மெல்லினம் வரின், லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரியும்.

(வேற்றுமை)

கல்+யாப்பு=கல்யாப்பு

முள்+யாப்பு=முள்யாப்பு

இவ்வாறு, வேற்றுமையிலே லகர, ளகர மெய்களின் முன் இடையினம் வரின் இயல்பாகும்.

(அல்வழி)

கல்+யாது=கல்யாது

முள்+யாது= முள்யாது

இவ்வாறு அவ்வழியில் லகர,ளகர மெய்களின் முன் இடை யினம் வரின் இயல்பாகும்.

கல்+தீது=கற்றீது

முள்+தீது=முட்டீது

இவ் வெடுத்துக்காட்டுக்களில், தம்முடன் மயங்காத தகரம் வந்தபொழுது, லகர ளகரங்கள் இயல்பாகாமல் முறையே றகர மாகவும், டகரமாகவும் திரிந்துள்ளன. அல்வழியுள் இங்ஙனம் வரும் திரிபு ஒன்றை மட்டும் ஏற்புழிக்கோடலால் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

இலக்கண விதி: லகர, ளகரமாகிய இரண்டு மெய்யீறுகளும் வேற்றுமையில் வல்லினம் வந்தால், முறையே றகரமாகவும், டகரமாகவும் திரியும். அல்வழியில் வல்லினம் வந்தால் இயல்பாயும் திரிந்தும் வரும். வேற்றுமையிலும் அல்வழியிலும் மெல்லினம் வந்தால், லகர, ளகர ஈறுகள் முறையே னகரமாகவும், ணகரமாகவும்