பக்கம் எண் :

104கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

திரியும். வேற்றுமையிலும் அல்வழியிலும் இடையினம் வந்தால், லகர, ளகர ஈறுகள் இயல்பாகும்.

லளவேற் றுமையிற் றடவு மல்வழி
அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி
மேவி னணவு மிடைவரி னியல்பும்
ஆக மிருவழி யானு மென்ப.

(ந-நூற்பா 227.)

பயிற்சி வினாக்கள்

1.பல, சில என்னும் இவ்விரு சொற்களும் தம்முன் தாம்வரின்
எவ்வாறு புணரும்?

2.பல, சில என்னும் இவ்விரு சொற்களும் தம்முன் பிறவரின்
எவ்வாறு புணவரும?

3.பூ என்னும் பெயர் வல்லினம் வர எங்ஙனம் புணரும்?
சான்று தருக.

4.தெங்கு என்பதன் முன் காய் என்ற சொல் வரின் எவ்வாறு
புணரும்?

5.மரப் பெயர்ச் சொற்களில் சில, வல்லினம் வரும், பொழுது
வேற்றுமையில் எவ்வாறு புணரும்? சான்று தருக.

6.தேன் என்னும் சொல்லின்முன் மூவின மெய்களும், வந்து
புணரும் முறையை விளக்குக.

7.பிரித்தெழுதுக: பற்பல, சில்வளை, பூங்கொடி, தேங்காய்.

8.சேர்த்தெழுதுக:

கள+கனி, மா+தளிர், தேக்+குழம்பு, தே+மலர்

9.செய்யுள் விகாரம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
எவையேனும் இரண்டிற்குச் சான்று தருக.