பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்105

10.ணகர,னகர ஈறுகள் வேற்றுமையில் வல்லினம் வர எங்ஙனம்
புணரும்?

11.ணகர, னகர ஈறுகள் வேற்றுமையில் மெல்லினமும்
இடையினமும் வர எங்ஙனம் புணரும்?

12.ணகர, னகர ஈறுகள் அல்வழியில் மூவினமும் வர எங்ஙனம்
புணரும்?

13.தூணன்று - புணர்ச்சி விதி கூறுக.

14.ய ர ழ ஈற்றின்முன் வல்லினம் வரின் அல்வழியில் எங்ஙனம்
புணரும்? வேற்றுமையில் எங்ஙனம் புணரும்? ஒவ்வொர்
சான்று தருக.

15.லகர, ளகர ஈறுகள் வல்லினம் வரின் அல்வழியில்
வேற்றுமையில் எவ்வாறு புணரும்? சான்று தருக.

16.லகர, ளகர ஈறுகள் மெல்லினம் வரின் இருவழியிலும்
எங்ஙனம் புணரும்? சான்று தருக.

17.லகர, ளகர ஈறுகள் இடையினம் வரின் இருவரியிலும்
எங்ஙனம் புணரும்?