106 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
5. பொருள் 1. அகத்திணை அகத்திணை, (அகம்+திணை) அகத்தே நிகழும் ஒழுக்கம் பற்றியது. அகப்பொருள் எனவும்படும். அஃதாவது, ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும், தாம் துய்த்த இன்பத்தைப் புறத்தார்க்க இத்தன்மையது என எடுத்துக் கூற இயலாததாய்த் தம் உள்ளத்தால் உய்த்துணரும் தன்மைய தாகும். எனவே, அகத்திணை எனப் பட்டது. அகத்திணை வகை: குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய் தற்றிணை, பாலைத்திணை என அகத்திணை ஐந்து வகைப்படும். இவற்றுடன், கைக்கிளைத்திணை, பெருந்திணை என்ற இரண்டையும் கூட்டி ஏழு வகையாகவும் கூறுவர். ஐந்திணைக்குரிய பொருள்: மேற்சொல்லப்பட்ட ஐந்திணைகளும் முதற்பொருள் - கருப்பொருள் - உரிப்பொருள் என்ற மூன்று வகையால் வழங்கப்படும். அவற்றுள் முதற்பொருள், கருப்பொருள் என்ற இரண்டையும் பற்றிக் காண்போம். முதற்பொருள் நிலமும், பொழுதும் முதற்பொருள் எனப்படும். 1. நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலம் ஐந்து வகைப்படும். |