பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்107

1.குறிஞ்சி-மலையும் மலைசார்ந்த இடமும்.

2. முல்லை-காடும் காடுசார்ந்த இடமும்.

3. மருதம்-வயலும் வயல்சார்ந்த இடமும்.

4. நெய்தல்-கடலும் கடல் சார்ந்த இடமும்.

5. பாலை-தனியாக நிலம் இல்லை. குறிஞ்சி நிலமும்,முல்லை நிலமும தத்தமக்குரிய தன்மை திரிந்த பகுதி பாலை நிலம் எனப்படும்.

2. பொழுது

பெரும்பொழுது, சிறுபொழுது எனப் பொழுது இரண்டு வகைப்படும்.

பெரும்பொழுது

இளவேனில், முதுவேனில், கார், கூதிர் (குளிர்) முன்பனி, பின்பனி எனப் பெரும்பொழுது ஆறு வகைப்படும்.

1. சித்திரை, வைகாசி-இளவேனிற் காலம்.

2. ஆனி, ஆடி-முதுவேனிற் காலம்.

3. ஆவணி, புரட்டாசி-கார் காலம்.

4. ஐப்பசி, கார்த்திகை - கூதிர் (குளிர் ) காலம்.

5. மார்கழி, தை-முன்பனிக் காலம்

6. மாசி, பங்குனி-பின்பனிக் காலம்

சிறுபொழுது

காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை எனச் சிறுபொழுது ஆறு வகைப்படும்.

1. சூரியன் உதித்ததுமுதல் பத்து நாழிகை வரை (காலை 6 மணி முதல் 10 மணி வரை) உள்ள நேரம் ‘காலை’ எனப்படும்.

2. பகல் பத்து நாழிகை முதல் இருபது நாழிகைவரை (10 மணி முதல் 2 மணி வரை) உள்ள நேரம் ‘நண்பகல்’ எனப்படும்.