பக்கம் எண் :

108கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

3. பகல் இருபது நாழிகை முதல் முப்பது நாழிகை வரை (2 மணிமுதல் 6 மணி வரை) உள்ள நேரம் ‘ஏற்பாடு’ எனப்படும். (ஏற்பாடு=எல்+பாடு. எல்=சூரியன். பாடு-மறைதல்.)

4. சூரியன் மறைந்தது முதல் பத்து நாழிகை வரை (மாலை 6 மணி முதல் 10 மணி வரை) உள்ள நேரம் ‘மாலை’ எனப்படும்.

5. இரவு பத்து நாழிகைமுதல் இருபது நாழிகை வரை (இரவு 10 மணி முதல் 2 மணி வரை) உள்ள நேரம் ‘யாமம்’ எனப்படும். (யாமம்=நள்ளிரவு.)

6. இரவு இருபது நாழிகைமுதல் சூரியன் உதிக்கும்வரை (இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை) உள்ள நேரம் ‘வைகளை’ எனப்படும். (வைகறை = விடியற்காலம்.)

ஐந்து நிலங்களுக்கு உரிய
பெரும்பொழுதும் - சிறு பொழுதும்

1. குறிஞ்சி

குளிர்காலம், முன்பனிக்காலம் என்ற பெரும் பொழுதுகளும், யாமம் என்ற சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக் குரியன.

2. முல்லை

கார் காலமாகிய பெரும்பொழுதும், மாலையாகிய சிறு பொழுதும் முல்லை நிலத்துக் குரியன.

3. மருதம்

ஆறு பெரும்பொழுதுகளும், வைகறையாகிய சிறுபொழு தும் மருத நிலத்துக் குரியன.

4. நெய்தல்

ஆறு பெரும்பொழுதுகளும், ஏற்பாடு எனப்படும் சிறு பொழுதும் நெய்தல் நிலத்துக் குரியன.

5. பாலை

இளவேனில், முதுவேனில், பின்பனி என்ற பெரும்பொழுது களும், நண்பகலாகிய சிறுபொழுதும் பாலை நிலத்துக் குரியன.