கருப்பொருள் ஒவ்வொரு திணைக்கும் உரிய இயங்குதிணையும், நிலத் திணையுமாகிய பொருள்கள், கருப்பொருள்கள் எனப் படும். அவை, தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் எனப் பதினான்கு வகைப்படும். அவை வருமாறு. குறிஞ்சித்திணைக் கருப்பொருள் 1.தெய்வம்-முருகன் 2.உயர்ந்தோர்-பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி,கொடிச் சி. 3.தாழ்ந்தோர்-குறவர், கானவர், குறத்தியர். 4.பறவை-கிளி, மயில் 5.விலங்கு- புலி, கரடி, யானை, சிங்கம். 6.ஊர்-சிறுகுடி 7.நீர்-அருவிநீர், சுனை நீர் 8.பூ-வேங்கைப் பூ, குறிஞ்சிப் பூ, காந்தட் பூ. 9.மரம்-சந்தனம், தேக்க, அகில்,அசோகு, நாகம், மூங்கில். 10.உணவு-மலை நெல், மூங்கிலரிசி,தினை. 11.பறை-தொண்டகப்பறை. 12.யாழ்-குறிஞ்சியாழ். 13.பண்-குறிஞ்சிப்பண், |