பக்கம் எண் :

112கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

12.யாழ்-மருதயாழ்.

13.பண்-மிருதப்பண்,

14.தொழில்- விழாச் செய்தல், வயல் களை கட்டல், நெல்லரிதல், கடாவிடுதல், குளத்தில் நீராடல், புதுப்புனலாடல்.

நெய்தற்றிணைக் கருப்பொருள்

1.தெய்வம்-வருணன்.

2.உயர்ந்தோர்-சேர்ப்பன், புலம்பன்,பரத்தி, நுளைச்சி.

3.தாழ்ந்தோர்- நளையர், நுளைச்சியர், பர தர், பரத்தியர், அளவர், அளத் தியர்.

4.பறவை-கடற்காக்கை.

5.விலங்கு-சுறாமீன்

6.ஊர்-பாக்கம், பட்டினம்

7.நீர்-உவர் நீர்க்கேணி, கவர் நீர்.

8.பூ-நெய்தற் பூ, தாழம்பூ, முண் டகப் பூ, அடம்பம்பூ

9.மரம்-கண்டல், புன்னை, ஞாழல்

10.உணவு-மீன், மீனும் உப்பும்
விற்றுப் பெற்ற பொருள்கள்.

11.பறை-மீன் கோட்பறை, நாவாய்ப் பறை, பம்பை.