பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்113

12.யாழ்-விளரியாழ்.

13.பண்-செவ்ழிப்பண்,

14.தொழில்-மீன் பிடித்தல், உப்பு விளைத் தல், அவற்றை விற்றல், மீன் உலர்த்தல்,பறவையோட்டு தல், கடலாடல்.

பாலைத்திணைக் கருப்பொருள்

1.தெய்வம்-துர்க்கை.

2.உயர்ந்தோர்-விடலை, காளை, மீளி, எயி ற்றி.

3.தாழ்ந்தோர்- எயினர், மறவர், எயிற்றியர், மறத்தியர்.

4.பறவை-பருந்து, புறா, எருவை, கழுகு.

5.விலங்கு-செந்நாய்.

6.ஊர்-குறும்பு.

7.நீர்-நீரில்லாக்குழி, நீரில்லாக் கிணறு

8.பூ-குராஅம்பூ, மரா அம்பூ.

9.மரம்-உழிஞை, பாலை, ஓமை, இருப்பை

10.உணவு-வழியில் பறித்த பொருள்கள்,
ஊர்களில் கொள்ளையிட்ட
பொருள்கள்.

11.பறை-துடி

12.யாழ்-பாலையாழ்.