பக்கம் எண் :

114கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

13.பண்-பஞ்சுரம்

14.தொழில்-போர் செய்தல், பகற்சூறை யாடல்.

2. புறத்திணை

ஒத்த அன்புடையவர்தாமே அன்றி எல்லாராலும் துய்த்து உணரக்கூடியதாய் , புறத்தார்க்கும் இத்தன்மைத்தென எடுத்துக் கூறக்கூடியதாய், அறம்பொருள் என்பனவற்றைப் பற்றிப் புறதே நிகழும் ஒழுக்கம், புறத்திணை எனப்படும். (புறம்- வெளி. திணை-ஒழுக்கம்)

புறத்திணை, பன்னிரண்டு. அவை வருமாறு:-

1. வெட்சித்திணை: பகைவருடைய பசுக்கூட்டங்களைக் கவர்தல். இதற்கு அடையாளமாக வெட்சிப் பூவைச் சூடுதல் மரபு.

2.கரந்தைத் திணை: பகைவர் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங் களை மீட்டல், இதற்கு அடையாளமாகக் கரந்தைப் பூவைச் சூடுதல் மரபு.

3.வஞ்சித்திணை: பகைவருடைய நாட்டின் மீது படை எடுத்துச் செல்லுதல். இதற்கு அடையாளமாகக் வஞ்சிப் பூவைச் சூடுதல் மரபு.

4. காஞ்சித்திணை: படை எடுத்து வந்த பகைவர், தம் நாட்டினுள் நுழையாதபடி எதிர் சென்று தடுத்தல். இதற்கு அடையாளமாகக் காஞ்சிப் பூவைச் சூடுதல் மரபு.

5.நொச்சித்திணை: படை எடுத்து வந்த பகைவர், உள்ளே நுழையாதபடி தம் மதிலைக் காத்தல். இதற்கு அடையாளமாகக் நொச்சிப் பூவைச் சூடுதல் மரபு.

6.உழிஞைத்திணை: பகைவருடைய மதிலைச் சுற்றி வளைத்துக் கொள்ளுதல். இதற்கு அடையாளமாகக் உழிஞைப் பூவைச் சூடுதல் மரபு.

7.தும்பைத்திணை:இருதிறத்துப் படைவீரர்களும் போர்க் களத்தில் எதிர்த்து நின்று அதிரப்போர் புரிதல். இதற்கு அடையாள மாக இருதிறத்தாரும் தும்பைப் பூவைச் சூடுதல் மரபு. (இரு திறத்து