வீரரும் தத்தம் மன்னர்களுக்கே உரிய சிறப்புப் பூவுடன், வெட்சி முதலாய பூக்களைப் போர் நிகழ்ச்சிகளுக்கேற்ப உடன் சூட்டிக் கொள்வர்.) 8.வாகைத்திணை: பகைவரை வென்றவர், தம் வெற்றியைக் கொண்டாடுதல். இதற்கு அடையாளமாகக் வாகைப் பூவைச் சூடுதல் மரபு. 9.பாடாண்டிணை:(பாடு+ஆண்+திணை) பாடப்படு கின்ற ஆண் மகனது ஒழுக்கம் எனப்பொருள்தரும். அஃதாவது, பாடப்படுகின்ற ஆண்மகனது வீரம், வெற்றி, இரக்கம், ஈகை, புகழ் ஆகியவற்றைச் சிறப்பித்துப் பாடுவதாகும். 10.பொதுவியல்: மேலே கூறியுள்ள புறத்திணைகளுக் கெல்லாம் பொதுவான செய்திகளைக் கூறுவது. 11. கைக்கிளை: ஒருதலைக் காமம். அஃதாவது ஆண் பெண் ஆகிய இருவருள், ஒருவரிடத்தில் மட்டும் தோன்றும் அன்பு பற்றியது. 12.பெருந்திணை: பொருந்தாக் காமம். ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிடத்துத் தோன்றும் அன்பு பற்றியது. வெட்சித்திணையும், கரந்தைத்திணையும் ஒன்றற் கொன்று மறுதலைத் திணையாகும். வஞ்சித்திணையும், காஞ்சித்திணையும் ஒன்றற்கொன்று மறுதலைத் திணையாகும். நொச்சித்திணையும் உழிஞைத்திணையும் ஒன்றற் கொன்று மறுதலைத் திணையாகும். பயிற்சி வினாக்கள் 1.அகத்திணையாவது யாது? அஃது எத்தனை வகைப்படும்? அவை யாவை? 2.ஐந்திணைகளுக்குரிய பொருள்கள் எவை? 3.முதற் பொருள்கள் எவை? 4.நிலம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? |