பக்கம் எண் :

118கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

இங்ஙனம், வெண்பாவின் பொது இலக்கணமெல்லாம் அமையப்பெற்று, ஒரு விகற்பத்தாலோ, இரு விகற்பத்தாலோ இரண்டடிகளால் வரும் வெண்பா, குறள் வெண்பா எனப்படும்.

(நேரிசை வெண்பா)

(ஒரு விகற்பம்)

“கஞ்சி குடியாளே கம்பன்சோ றுண்ணாளே
வெஞ்சினங்கள் என்றும் விரும்பாளே நெஞ்சதனில்
அஞ்சதலை யாவருக்கம் ஆறுதலை யாவாளே
கஞ்சமுகக் காமாட்சி காண்.”

(இரு விகற்பம்)

“அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவையஞ்சா ஆகுலச் சொல்லும் - நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று.”

மேலே உள்ள இரண்டு நேரிசை வெண்பாக்களுள் முன்னது ஒரு விகற்பத்தால் வந்தள்ளது. பின்னது இரு விகற்பத்தால் வந்துள்ளது.

நேரிசை வெண்பா, வெண்பாவுக்குரி பொது இலக்கணம் எல்லாம் அமையப்பெற்று, ஒரு விகற்பமாயும், இரு விகற்பமாயும், இரண்டாமடியின் நான்காம் சீர் ஒரூஉத்தொடை பெற்ற தனிச் சொல்லாக நிற்க, நான்கடிகள் பெற்றுவரும். இது நேரிசை வெண் பாவின் இலக்கணமாகும்.

(இன்னிசை வெண்பா)

வெண்பாவின் பொது இலக்கணம் எல்லாம் அமையப் பெற்று, நேரிசை வெண்பாவில் சிறிது வேறுபட்டு நான்கடியாய் வருவது, இன்னிசை வெண்பா எனப்படும்.

அவை, தனிச்சொல் இன்றி ஒரு விகற்பமாய் வருதலும், தனிச் சொல் இன்றி பல விகற்பமாய் வருதலும், அடி தோறும் தனிச் சொல் பெற்று வருதலும், இரண்டாம் அடியின் இறதிச் சீர் தனிச் சொல்லாய்