122 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
எதுகை மோனை எடுத்து எழுதுதல்: “ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா ஊக்க முடையா னுழை.” முதல்வரியின் முதற்சீரில் ‘க்’ என்ற இரண்டாம் எழுத்தும், இரண்டாம் வரியின் முதற்சீரில் ‘க்’ என்ற இரண்டாம் எழுத்தும் ஒன்றி வந்துள்ளது. எனவே இஃது அடி எதுகையாகும். முதல்வரியில், முதற்சீரின் முதல் எழுத்தும், இரண்டாம் சீரின் முதல் எழுத்தும், மூன்றாஞ்சீரின் முதல் எழுத்தும் ஆ-அ-அ என ஒன்றி வந்துள்ளன. எனவே சீர் மோனையாகும். இரண்டாம்வரியில், முதற்சீரின் முதல் எழுத்தும், இரண்டாஞ் சீரின் முதல் எழுத்தும், மூன்றாஞ்சீரின் முதல் எழுத்தும் ஊ-உ-உ என ஒன்றி வந்துள்ளன. எனவே சீர் மோனையாகும். இங்ஙனம், செய்யுளை அசை பிரித்து, வாய்ப்பாடு கூறித் தளையும், எதுகையும், மோனையும் எடுத்து எழுதுவது அலகிடுதல் எனப்படும். பா வகைகளுக்கு ஏற்ப அவ்வவற்றிற்குரிய வாய்பபாடு களையும், தளைகளையும் அறிந்து எழுத வேண்டும். வெண்பாவின் இறுதிச் சீருக்கு வாய்ப்பாடு எழுதும் பொழுது மட்டும் நினைவோடு ‘காசு-பிறப்பு நாள்-மலர்’ என்ற வாய்பாடுகளில் ஒன்றை அறிந்து எழுத வேண்டும். பயிற்சி வினாக்கள் 1.வெண்பாவின் பொது இலக்கணத்தைக் கூறுக. 2. ஒரு விகற்பத்தால் வரும் குறள் வெண்பாவுக்கு, இரு விகற் பத்தால் வரும் குறள் வெண்பாவுக்கும் சான்று தருக. 3. நேரிசை வெண்பாவின் இலக்கணத்தைக் கூறுக. 4. இன்னிசை வெண்பாவிற்கச் இலக்கணம் யாது? 5. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைக் கூறுக. 6. பின்வரும் குறட்பாவை அலகிட்டு வாய்பாடு கூறித்தளை, எதுகை , மோனைகளை எடுத்து எழுதுக. “செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.” |