பக்கம் எண் :

142கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

அவற்றைப் பன்முறை படித்துக் குறிப்புக்களை அமைத்துக் கொண்டு கட்டுரை எழுதத் தொடங்க வேண்டும்.

13. பொருள் வகையாலும், நடைவகையாலும்
சிறந்த கடிதங்கள் எழுதுதல்.

மாணக்கர்கள் பொருள் வகையாலும், நடைவகையாலும் சிறந்த கடிதங்களை எழுதிப் பழகுதல் வேண்டும். ஒரு விழா நடத்துவதற்குமுன் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்துச் செயலருக்கு எழுதலாம். தம் தம்பி தங்கையர்க்கு அறிவுரை ஸபகன்று ஆக்க வழியில் ஈர்த்துச் செல்லக் கூடிய கடிதமாக அமையலாம். தம் பெற்றோர்க்கத் தம் நிலையை விளக்கி வரைகின்ற கடிதமாக விருக்கலாம். நாடாளும் தலைவர்களுக்கு தம் வேண்டு கோள்களை நயம் பட எழுதி உணர்த்தலாம். தன் நண்பர்களுக்கு உள முருக்குகின்ற வகையில் கடிதம் எழுதித் தொடர்பை வலுப் படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு பல துறையிலும் நற் கடிதங்கள் எழுதிக் கடிதம் எழுதும் வன்மை கைவரப்பெறல் வேண்டும்.

கடிதம், தலைப்பு, முன்னுரை, பொருள், முடிவுரை, முகவரி என்ற ஐந்து பகுதிகள் அடங்கியதாக இருத்தல் வேண்டும்.

கீழ்க்காணும் பொருள்கள் குறித்துக் கடிதங்கள் எழுதிப் பயிலுக.

(1) பெற்றோர்க்குத் தன்னிலை குறித்துக் கடிதம் எழுதுதல் (2) நண்பனின் தேர்வு வெற்றிகண்டு மகிழ்ந்து கடிதம் எழுதுதல் (3) நீ பார்த்த விழாச் சிறப்புற நடந்தது குறித்து விழாத் தலைவருக்குக் கடிதம் எழுதுதல் (4) உன் தம்பி தங்கையர்க்கு அறிவுரை கூறுகின்ற முறையில் கடிதம் எழுதுதல் (5) நீ படித்துச் சுவைத்த புத்தகம் பற்றி உன் நண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (6) நீ பார்த்துக் களித்த நாடகக் காட்சி குறித்து நண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (7) நீ சுற்றுலாச் சென்றது குறித்து நண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (8) நீ பார்த்துப் பேசிய அறிஞரைப் பற்றி நண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (9) உலகத் தமிழ்க் கருத்தரங்க நடந்த முறை குறித்து வெளிநாட்டு நண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (10) கடல் கடந்த நண்பனுக்குக் கல்வி நிலை குறித்துக் கடிதம் எழுதுதல்.