வோருக்கு வரவேற்புரை எழுதிப் படித்தலுண்டு. பேரறிஞர்கள், பெரும்புலவர்கள், அமைச்சர்கள், போன்றோர் தலைமை வகிக்கின்ற பொழுது அவர்களுக்கு வரவேற்புரை எழுதிப்படிப்பர். வரவேற் புரை எழுதுகின்ற பொழுது வரவேற்கப்படுகின்றவரின் பண்பு நலன், அறிவு, உரு, கல்வி, பொறுப்பு, தொண்டு முதலியவற்றைக் குறிப்பிட்டு வரவேற்புரை எழுதுதல் வேண்டும். உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு.மா. முத்து சாமி பி.ஏ., பி.டி. அவர்கள் 16-9-‘67இல் கானரக்குடிக்கு வருகை தந்த பொழுது, அவருக்கு அளித்த வரவேற்பிதழ், கீழே கொடுக்கப் பெற்றுள்ளது. அதனைக் காட்டாகக் கொண்டு வரவேற்புரை எழுதிப் பழகுக. வரவேற்புரை குடிபுரந்தழுவும் நலங்கேள் அமைச்சே! பள்ளியாசிரியராகப் பணிபுரிந்து, பாராளுமன்றம் புகுந்த மாண்புமிக்க உள்ளாட்சித் துறை அமைச்சே! அல்லும் பகலும் ஒல்லும் வகை ஒன்று ஓவாது செல்லும் வாயெல்லாம் செவ்வினை யாற்றும் செஞ்ஞாயிற்றின் ஒளிக் கதிரே! நும்மைக் கள்ளமில் வெள்ளைச் சிந்தை வாழ்த்தொலு எழுப்ப, காலைமுதல் கங்குல் தொடரக் கைவினையாற்றும் கரம் கூப்ப, உழைப்போரை வணங்கும் தலை தாழ வணக்கம் கூறி வருக! வருக!! என வரவேற்கின்றோம். |