154 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
அறிஞருள் அறிஞர்வழி நின்றெழுகும் அண்ணலே! கழகத்தின் கடன்களைக் காலந் தவறாது கட்டிக் காத்து, மக்கள் தொண்டே மனிதத் தொண்டெனத் தொண்டுக் கொடி யேந்தித் துன்புறுவோர் துயர் துடைக்கவந்த தூயோய்! பார்புரக்கும் மாரியென, பைந்தமிழ் நாடு புரக்கும் தமிழேர் உழவர் பண்பாட்டின் திருவுருவே! பகுத்தறிவின் ஒளிவிளக்காம் அறிஞருள் அறிஞர் அடிச்சுவட்டில் நிற்றெழுகும் அருமை இளவலே! எங்கள் அமைச்சே! இவண்போந்து எங்கள் இடத்தை அணிசெய்தமை குறித்து நாங்கள் அகமகிழ்கிறோம். தங்கள் இனிய வருகைக்கு மீண்டும் உளமொன்றிய வணக்கம் கூறி வருக வருகவென வரவேற்கின்றோம். 21. பிரிவுரை எழுதுதல் உங்கள் ஊரில், பணியாற்றிய அலுவலர்கள், ஆசிரியர்கள், வெளியூருக்கு மாறிச் செல்லுகின்றபொழுது, அல்லது வேலை உயர்வு கிடைத்துச் செல்லுறொணாது எழுதுவதே பிரிவுரைக் கட்டுரையாகும். பிரிவுரை எழுதுகின்றபொழுது, பிரிந்து செல்லு கின்றவருடைய தொண்டு, பண்புநலன்கள் ஆகியவற்றை உளத்தில் கொண்டு எழுதவேண்டும். கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள பிரிவுரையிதழைக் காட்டான நினைவிற்கொண்டு, பிரிவுரைக் கட்டுரைகள் எழுதிப் பழகுக. காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் தமிழா சிரியராகப் பணியாற்றிய திரு. தமிழண்ணல் எம்.ஏ.அவர்கள், கல்லூரி விரிவுரை யாளராக வேலையுயர்வு பெற்றுச் சென்றுழி, மாணவர்கள் படித் தளித்த பிரிவுரையிதழ். உளங்கொள உணர்த்தும் ஒண்மதியோய்! மலர்ந்த முகத்துடன், மாசறு புன்னைகையுடன் மாணவர் முன் தோன்றும் தெளிவும் கட்டுரை வன்மையும் வாய்க்கப்பெற்ற எங்கள் தமிழாசிரியப் பெருந்தகையோய்! கொள்வான் கொள்வகையறிந்து, மாணவர் உளங்கொளப் பயிற்றுவிக்கும் எம் முளமுறை தெய்வமே! நீவீர், கல்லூரிப் பேராசிரியராகப் போவது குறித்து நாங்கள் கழிபேருவகை கொள்கிறோம். ஆயினும், தங்கள் பிரிவால் தமிழ் நெஞ்சங்கள் வருந்துகின்றன! எமக்கு எழுத்தறிவிக்கும் இறைவரே! நல்லன கருதிப் பிரிவதால் இன்பமும், துன்பமும் கலந்து நிலையில் செல்க, சிறக்க என நெஞ்சார வாழ்த்துகிறோம். பாநலமும், நாநலமும், உரைவளமும் ஒன்றிய உயரியோய்! தாங்கள் வகுப்பறையில் நடத்திய பாடங்களை எண்ணு கின்றபொழுது, எங்கள் நெஞ்சம் மகிழ்கிறது. இனி எப்பொழுது வகுப்பறையில் தாங்கள் நடத்தும் பாடங்களைக் கேட்போம் என ஏங்கி நனிமிக வருந்துகிறோம். தங்கள் பாநலத்தைப் பாட்டரங்கு களிலும், நாநலத்தைச் சொற்போர்க்களங்களிலும், உரைவளத்தைத் தங்கள் பனுவல்களிலும் கண்டு, கேட்டு, உண்டு உயிர்த்த நாங்கள், |