பக்கம் எண் :

156கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

கணித்து வாழ்தல் முடியாதென மேடைதோறும் அஞ்சா நெஞ்சுடன், அரிமா நோக்குடன், தமிழிடம் காழ்ப்புக் கொண்டோ ரையும் கவரும் வண்ணம் கன்னித் தமிழில் பேசினை. நும்முடைய பேச்சால் மேடைத் தமிழ் வாழ்வு பெற்றது.

இவ்வாறு நும்மால் மேடைத் தமிழோடு, உரை நடைத் தமிழும் வளர்க்கப்பெற்றது. நும்முடைய பேருழைப்பால் நூற்றுக் கணக்கான பனுவல்கள் தமிழர்க்குப் பெருமுதலாகக் கிடைத்துள்ளன. தங்களிடம் கல்வி கற்ற காரணத்தால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழ் காத்துத் தாயகம் பேணி வருகின்றனர்.

ஆதலின் மொழி வாழவும், நாடு வளரவும் தாங்கள் இன்னும் பல்லாண்டு பேராசிரியப் பொறுப்பேற்றுப் பணிபுரிதல் வேண்டு மென எல்லாம் வல்ல இயற்கையை இறைஞ்சுகிறேன்.

மேல் மொழிந்த புகழுரையைக் கேட்ட, தமிழ்ப் பேராசிரியர் விடுத்த மறுமொழி.

என் உழுவலன் புடைக் கெழுதகை நண்பர் அவர்கள், தமிழின் பாலுளதணியாக் காதலால், தமிழால் வாழும் என்னைப் பலபடப் பாராட்டிக் புனைந்துரைத்தார்கள். அவர்கள் புகழ்ந்த புகழுரை களுக்கு நான் எட்டுணையும் தகுதியுடையவனல்லேன்.

அவர்கள் கூறுகின்ற பொழுது என்னால் மேடைத் தமிழ் வளர்ந்ததென்றார்கள். அவ்வாறெல்லாமில்லை. எனக்கு முன்பே திரு.வி.க., மறைமலையடிகள், இராமலிங்க அடிகள், நாவலர், பாரதியார் போன்ற தமிழ்ப் பேரறிஞர்களால் மேடைத் தமிழ் வளர்க்கப் பட்டு வந்துள்ளது. அவர்களை அடியொற்றியே நான் சென்றுள்ளேன்.

மேலும் அவர்கள், என்னால் உரைநடைத் தமிழ் வளர்ந்த தென்றார்கள். இவ்வாறு கூறுவது என்பாலுள பெருமதிப்பையும், அன்பையும்தான் புலப்படுத்துகிறது. எனக்குமுன் உரைநடைத் தந்தை, உரைநடை வேந்தரெலாம் தமிழில் பல நூல்கள் யாத்துத் தமிழ் மண்ணில் உலவவிட்டிருக்கிறார்கள். அவர்களைப் பின் பற்றியே யான் சென்றுள்ளேன். முன்னோர் எவ்வழி சென்றள்ளன ரோ அவ்வழியிலே நான் சென்றுள்ளேன். நான் தமிழ்ப் பேராசிரிய ராக விருந்த கராணத்தால் என்னுடைய கடமையை முடிந்தவரை