158 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
பொய்கையார்: அன்புடை மன்ன! நின்மொழி கேட்டு என் அகம் குளிர்கிறது. மகிழ்ச்சி! நினது அடக்கத்தை யாவரும் போற்றுவர் என்பதில் தடையில்லை. அமைச்சர்: சிலர் அழுக்காறும் கொள்ளுகின்றனர். சேரமான்: என்ன? அமைச்சர்: தங்கம் புகழ் பெருகி வருவதைக் கண்டு சோழ மன்னர் அழுக்காறு கொள்வதாக ஒற்றர் வாயிலாக அறிகிறேன். பொய்கையார்: உலகம் பலவிதம் மன்ன! இதைப் பொருட் படுத்த வேண்டாம். நாம் கலை மன்றம் செல்வோம். (அவை கலைகிறது.) காட்சி-2 இடம்: உறையூர்; சோழன் அரண்மனையில் கொலு மன்றம். காலம்: மாலை. நடர்: சோழன் கோச்செங்கணான், அமைச்சர்கள், மதிவலன், கயமன், படைத் தலைவன் படிறன், ஏவலர் முதலியோர். சோழன்: அமைச்சரே! நாட்டியம் நடைபெறலாமே! கயமன்: கட்டளை (கயமன் ஏவலால் ஒருத்தி நாட்டிய மாடி வணக்கம் செலுத்திச்செல்கிறாள்.) சோழன்: நன்று! நன்று! நாட்டியக் கலையின் மேன்மையே மேன்மை! கயமன் : மிகவும் உயர்வான கலை! மதிவலன் : சமண முனிவர்கள் இதை வெறுத்துக் கூறியிருக் கிறார்கள், வேந்தே! படிறன் : கலையின் பெருமையை உணராதவர்கள்! கயமன் : துறவிகளுக்குக் கலையின் உணர்வேது? சோழன் : துறவிகள் ஐம்புலனை அடக்கியவர்கள். ஆகை யால், இன்பக் கலைகளில் நாட்டம் வைக்க விரும்பு வதில்லை! |