பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்159

படிறன் : (நகைத்து) துறவிகள் இன்பத்தையே விரும்புவ தில்லை!

மதிவலன் : நிலைத்த இன்பத்தையே நாடுகிறார்கள்!

சோழன் : நிறுத்தம்! நாட்டியம் முதலிய கலைகளின் இன்பம் நிலையா இன்பமோ? மிக நன்று! பொய்கையார் என்ற புலவர் கூறியது போலல்லவா இருக்கிறது!

மதிவலன் : உண்மையைக் கூறினேன், மன்ன!

சோழன் : (சினந்து) உண்மை! உலகம் உண்மையை எங்கே மதிக்கிறது? போர் தொடுத்துப் பகைவரைக் கடிந்து நாட்டைக் காக்கும் நம்மைப் பாராட்டுகிறதா, உலகம்? அரசாட்சியிற் கவலையின்றிப் புலவர்களுடன் கூடிக்கொண்டு உலகை மறந்து வாழும் சேரனையன்றோ புகழ்கிறது!

கயமன் : பைத்தியக்கார உலகம்!

சோழன் : போதும் நிறுத்தம்! பொய்கையாரின் மணக்கன் என்பதில் செருக்கடைகிறான் சேரன்!

படிறன் : புலவர்களெல்லாம் சேரனைப் பொய்யாகப் புகழ்ந்து பாடி அவன் பெருமையைத் தெருவெல்லாம் பரப்பு கிறார்கள். அதை மெய்யென்று நம்பும் பேதை மக்கள் சேரனைப் போற்றுகிறார்கள்!

கயமன் : இதற்கெல்லாம் காரணம் பொய்கையார்!

சோழன் : ஆம்; அவர்தான்! அமைச்சரே! நீர் சென்று அப் புலவரை எவ்வாறேனும் நமது அவைக்குக் கொண்டு வரவேண்டும். என்ன?

கயமன் : இன்றே செல்கிறேன்.

(சோழன் எழுந்ததும் அவை கலைகிறது.)

24. மாணவர் மன்றங்களுக்கு விதிகள் அமைத்தல்

பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து மாணவர் மன்றம், அல்லது இலக்கியக் கழகம் என ஓர் அமைப்பு ஏற்படுத்