160 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
துதல் மரபு, அம் மன்றங்கள் மாணவர்களின் கல்வி நலத்தை வளர்ப்பதற்காகவும், பயன்படுகின்றன. மன்றமென ஒன்று இருக்கு மானால், அதற்கெனச் சில விதிகளும் கட்டுப்பாடுகளும் இருத்தல் வேண்டும். இவ்வாறு இளமையிலேயே மன்றங்கள் அமைத்து, அவற்றிற்குரிய விதிகளும் அமைக்கப் அமைத்து, அவற்றிற்குரிய விதிகளும் அமைக்கப் பயிற்சி பெறுவது, பின்னர்ப் பொது வாழ்க்கையில் பெரிதும் பயன்படும். இங்குக் கீழே தரப்பட்டுள்ள மன்ற விதிகளைப் பார்த்து, நீங்கள், உங்கள் மன்றங்களுக்கும் கழகங்களுக்கும் விதிகள் அமைத்துப் பழகுக மன்ற விதிகள் 1. மன்றத்தில், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவரும் உறுப்பினராய் இருத்தல் வேண்டும். 2. மன்றத்திற்குத் தலைவர், துணைத் தலைவர், செயலர், துணைச் செயலர், துணைச் செயலர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப் பெறல் வேண்டும். 3. மன்ற உறுப்பினர்களில் அறுவர் அல்லது எண்மர் செயற் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறல் வேண்டும். 4. கூட்டம் வாரத்திற்கு ஒருமுறை நடாத்தப் பெறல் வேண்டும். ஆசிரியரோ, மாணவரோ தலைவராக இருக்கலாம். 5. திங்கள் ஒருமுறை வெளியிலிருந்து புலமைசான்ற அறிஞர் களைச் சொற்பொழிவாற்றக் கூட்டி வருதல் வேண்டும். 6. மன்றத்தின் சார்பிலிருக்கும் படிப்பகத்திற்குக் கல்வி பற்றிய அனைத்து நாளிதழ்களும், வார இதர்களும், திங்களிதர் களும் வரவழைக்கப்டல் வேண்டும். 7. மன்றக் கூட்டங்களில் எல்லா மாணவர்களும் பங்கு பெறல் வேண்டும். 8. நூல்நிலையத்திற்கு வேண்டிய புத்தம் புதிய தமிழ் நூல்கள் வாங்கப்படல் வேண்டும். 9. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் மன்ற ஆண்டு விழாநடத்தி, அவ்விழாவில் மாணவர்க்குப் பரிசு வழங்கல் வேண்டும். |