16 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
2 சொல் தனி மொழி - தொடர் மொழி - பொது மொழி 1. தனிமொழி (ஒரு மொழி) நிலம் (பகாப்பதம்) நிலத்தன் (நிலம்+த்+த்+அன் - பகுபதம்) மேலே உள்ள எடுத்துக்காட்டுக்களில் ‘நிலம்’ என்ற சொல் பகுதிவிகுதிகளாகப் பிரிக்க முடியாத பகாப்பதமாகும். அது, தனித்து நின்று ஒரு பொருளைத் தருகிறது. எனவே அது, தனி மொழி (ஒரு மொழி) எனப்படும். ‘நிலத்தன்’ என்ற சொல் பகுதிவிகுதிகளாகப் பிரிக்கக் கூடிய பகுபதமாகும். அது, தனித்து நின்று ஒரு பொருளைத் தரு கிறது. எனவே, அதுவும் தனி மொழி (ஒருமொழி) எனப்படும். நாடுதில் நாடன்மன் நடதவ நடந்தான்நனி மேற்கண்ட எடுத்துக் காட்டுக்களில் நாடு, நாடன், நட, நடந்தான் என்ற பெயர் - வினைப்பகாப்பதங்களும், பகுபதங் களும் தனித்து நின்று தத்தம் ஒரு பொருளைத் தருகின்றன. தில், மன், என்ற இடைச் சொற்கள் தனித்து நின்று தத்தம் ஒரு பொருளைத் தருகின்றன. தவ, நனி என்ற உரிச்சொற்கள் தனித்து நின்று |