ஒரு கலவை வாக்கியத்தில், எழுவாய் அடைமொழிகள் எழுவாயைத் தழுவியும், செயப்படு பொருள் அடைமொழிகள் செயப்படுபொருளைத் தழுவியும், பயனிலை அடைமொழிகள் பயனிலையைத் தழுவியும் வரும். எ-டு: “இந்தியப் பெருநிலத்தின் விடிவெள்ளி யென வந்த காந்தி யடிகள், மாந்தருக்கு இன்றியமையாத விடுதலை உணர்வை இடை யறாரத ஊட்டினார்.” “இந்தியப் பெருநிலத்தின் விடிவெள்ளியென வந்த” என்ற பகுதி, எழுவாயாகிய ‘காந்தியடிகள்’ என்பதைத் தழுவியும், ‘இன்றியமையாத’ என்பது ‘விடுதலை உணர்வு’ என்னும் செயப் படுபொருளைத் தழுவியும், ‘இடையறாது’ என்பது, ‘ஊட்டினார்’ என்னும் பயனிலையைத் தழுவியும் பொருள் விளக்கம் தருகின்றன. 3. ஒரே கருத்தைப் பல உருவ வாக்கியங்களில் வெளியிடுதல் முன்னர்ப் பலவகை வாக்கியங்களைப் பார்த்தோம். ஒரு வாக்கியத்தையே பலவகை வாக்கியங்களாக மாற்றி அமைத்தலும் கூடும். வாக்கிய மாற்றப் பயிற்சியை மேற்கொள்ளுதல், மொழிநலத் தேர்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்படுவ தொன்றாகும். கீழ் வரும் வாக்கியத்தை உற்றுணர்க. “உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களையாரும் மறவார்” 1. இஃது ஓர் எழுவாயையும், ஒரு பயனிலையையும் கொண் டிருத்தலின் தனி வாக்கியம் என்று கூறப்படும். 2. வினா வடியாகப் பிறந்த பெயராகிய ‘யாரும்’ என்பதன் வினையாகிய ‘மறவர்’ என்பதைப் பயனிலையாகக் கொண்டிருத் தலின் செய்வினை வாக்கியம் என்றும் கூறலாம். 4. இவ்வாக்கியம் எதிர்மறை வினையைக்கொண்டு முடிந் திருத்தலின், எதிர்மறை வாக்கியம் என்றும் கூறலாம். இவ்வாக்கியத்தை வேறு பல வாக்கியங்களாகவும் மாற்றி யமைக்கலாம். 1.உள்ளத்தை உருக்குவன சிறந்த பாடல்கள்; அவற்றை யாரும் மறவார்(தொடர்வாக்கியம்) |