பக்கம் எண் :

166கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

2.உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களாயின்,
அவற்றை யாரும் மறவார்.(கலவை வாக்கியம்)

3.உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்கள், யாராலும்
மறக்கப்படா. (செயப்பாட்டு வினை வாக்கியம்)

4. உள்ளத்தை உருக்காத சிறப்பற்ற பாடல்களை யாரும்
மறப்பர். (உடன்பாட்டு வாக்கியம்)

5.விபுலானந்தர் “உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த
பாடல்களை யாரும் மறவார்” என்று கூறுகின்றார். (நேர்கூற்று வாக்கியம்)

6.உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களை யாரும்
மறவாரென்பதாக விபுலானந்தர் கூறுகின்றார்.
(அயற்கூற்று வாக்கியம்)

7.உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களை
யார்தாம் மறப்பர்? (வினா வாக்கியம்)

8.உள்ளத்தை உருக்காத, சிறந்த பாடல்களாயின்
யாவரும் மறக்கட்டும். (கட்டளை வாக்கியம்)

9.உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களை யாரும்
மறப்பரோ! (உணர்ச்சி வாக்கியம்)

4. பத்தியமைப்பு (விரிவாக)

பத்தி என்பது கட்டுரையின் ஒருறுப்பாகும். பத்தியானது பல தொடர் மொழிகளால் ஆக்கப்பட்டிருப்பினும், ஒரு கருத்து அல்லது குறிப்பை விரித்துரைப்பதாகவே அமையும். கருத்து அல்லது குறிப்பை உய்த்துணரும் வகையில் கரந்து வையாது வெளிப் படையாகத் தாங்கி நிற்றல் சிறப்புடையதாகும். பத்தியின் கருத்து அல்லது குறிப்பு, பத்தியின் எப்பகுதியில் வேண்டுமாயினும் நிற்கலாம். எனினும், தொடக்கத்திலேயே நிற்றல் கற்பார்க்கு இனிமையைப் பயக்கும்

ஒன்றுக்கு மேற்பட்ட பல கருத்துக்களை அல்லது குறிப்புக் களை, ஒரே பத்தியில் திணித்து வைத்தல் கட்டுரையின் அழகிற்கும், இனிமைக்கும் ஊறு விளைவிக்கும்.