பக்கம் எண் :

168கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

5. நடை (விரிவாக)

நடை என்றால் ஒழுக்கம் எனப்படும். சொற்கள் பொருளை விளக்க ஒழுங்காக அமைந்து செல்லுதலை நடை என்றனர். சொற்கள் ஒழுங்குபெற அமையாது முரணி நிற்பின் கருத்துக் குழப்பம் ஏற்படும். ஆதலின் கருத்துத் தெளிவிற்கும், அழகுபட மொழிதற்கும் சொற்கள் ஒழுங்குபெற அமைதல் இன்றியமையாது வேண்டப்படுகின்றது. இதனையே நடை என்கிறோம்.

நம் தமிழ்மொழிக்கண் விளங்குகின்ற நடைகள் பலவாம். அவற்றை நெறிப்படுத்திக் கூறின் ஆற்றெழுக்கு நடை, மணிபவள நடை, தனித் தமிழ் நடை, செந்தமிழ் நடை, கொடுந் தமிழ் நடை, கொச்சை நடை, களவியல்நடை, செய்யுள் நடை, இலக்கிய நடை, தருக்க நடை, கலப்பு நடை எனப் பலவகையாய் விரியும்.

ஆற்றொழுக்கு நடை: ஆறானது எவ்வாறு தங்கு தடையின்றி ஒரே சீராக ஓடுகின்றதோ; அஃதே போன்று சொற்களும் தங்கு தடையின்றி ஒரே சீராகச் செல்லுமாறு உரைக்கப்படுவது ஆற்றொழுக்கு நடையாகும்.

எடுத்துக்காட்டு:

“கையில் வில்லை எடுத்துக்கொண்டு, காட்டில் வாழும் விலங்குகளை வேட்டையாடினான் தமிழன் அவ்விலங்குகளைக் குறிபார்த்து அம்பைத் தொடுத்து, நாணேற்றி விடும்போ தெல்லாம் அந்நாண் ஓர் இனிய ஓசையை எழுப்பக் கேட்டான்; மனம் மகிழ்ந்தான்; வில்லிப்பூட்டிய நரம்பினால் கொலை முடிப்பதை விட்டு, இசை வடிப்பதை ஆராய்ந்தான். வில் யாழும், யாழ் வகைகளும், நரம்புக் கருவிகளும் உருவாயின.”

“யாழ் எங்கே” - தமிழண்ணல்.

மணிபவள நடை : (மணிப்ரவாள நடை)

மணியும் பவளமும் விரவத் தொடுத்த ஆரம் போல, வட சொல்லும் தென்மொழியும் விரவத் தொடுத்த நடை மணிபவள நடையாகும்.

“ஞாயிற்றுக்கிழமை அஸ்வதி நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில், என் சிரேஷ்ட குமாரன் விஜயனுக்குப் பிரம்