பக்கம் எண் :

172கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

பழமொழிச் சொற்களும், இழி வழக்கும் கலந்து எழுதப் படுவதே கலப்பு நடை. இதனை மாணாக்கர் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும்.

6. வழூஉச் சொற்களும் திருத்தமும்

வீட்டிலும் வெளியிலும் பேசப்படுகின்ற கொச்சை மொழி களும், இழி வழக்குக்களும் மெல்ல மெல்ல எழுத்திலும் இடம் பெறத் தொடங்கிவிடுகின்றன. ஆதலின் தொடக்கத் திலேயே இச்சொற்களைப் பேச்சிலும் எழுத்திலும் விலக்க வேண்டுவது இன்றியமையாததாகும். அதற்குத் துணையாக ஈண்டுச் சில வழூஉச் சொற்களும் அவற்றின் திருத்தங்களும் தரப்பட்டுள்ளன. வழூஉச் சொற்களை யாண்டுக் கேட்பினும் உடனே குறித்துக்கொண்டு ஆசிரியரை அண்மி அச்சொல்லின் உண்மை வடிவத்தை அறிய முயல்க.

வழூஉச் சொற்கள்திருத்தம்

அண்ணாக் கயிறுஅரைஞாண் கயிறு

அமக்களம்அமர்க்களம்

ஆச்சுஆயிற்று

இடது பக்கம்இடப்பக்கம்

வலது பக்கம்வலப்பக்கம்

உடமைஉடைமை

தாவாரம்தாழ்வாரம்

செகப்புசிவப்பு

சேதிசெய்தி

நொங்குநுங்கு

வவுறுவயிறு

மானம் பாத்த பூமிவானம் பார்த்த பூமி

வெக்கம்வெட்கம்

அப்பரம்அப்புறம்

உசிருஊயிர்

சிலவுசெலவு

தலகாணிதலையணை

நாத்துநாற்று