7. விலக்குதற்குரிய இழி வழக்குக்கள் அத்தைக்காரி, அண்ணாச்சி, ஆம் படையான், ஆம் பிளைப் பிள்ளை, வென்னித்தண்ணி, கதைக்குறான், ஜல்ப் பிடிச்சிருக்கு, இஸ்துக்கினு போறான், கேட்டு வாசல், டபாய்க்கிறான், பேஜாரு, ஷாப்புக்கடை, ஒட்லவுழுந்து கெட, நாமஞ் சாத்தறான், வெறுத்து வாங்கிட்டான், சாயம் வெளுத்துப் போச்சு, டிமிக்கி அடிச்சான், டேக்கா கொடுத்தான், வாலாட்றான், டம்பாச்சாரி. இவை போல் வனவாகிய இழிவழக்குக்களை மாணாக்கர், பேச்சிலும் எழுத்திலும் விலக்குதல் வேண்டும். 8. நிறுத்தற்குறிப் பயிற்சிகள் முன் வகுப்புக்களில் காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற் புள்ளி,முற்றுப்புள்ளி, வினாக்குறி, உணர்ச்சிக்குறி இரட்டை மேற்கோட் குறிகள், ஒற்றை மேற்கோட் குறிகள், பிறைக்கோடு, வரலாற்றுக் குறி, கீழ்க்கோடிடல், இடைப்பிறவைப்புக் குறி முதலிய குறியீடுகளை வாக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இப்பொழுது மேலும் இரண்டு குறியீடுகளைப் பற்றி அறிந்து கொள்க. 1. நாம் தொடர்ந்து எழுதிச் செல்லும்போது ஏதேனும் விடுபட்டால், அதனை எந்த இடத்தில் விடுபட்டதோ அந்த இடத்தில் வரிப்பிளந்து மேலே எழுதுகிறோம். அவ்வாறு எருதும் போது “இதையும் சேர்த்துப் படியுங்கள்” என்பதற்கு அடை யாளமாக இவ்வாறு ஒரு குறியீட்டைப் பயன் படுத்துகிறோம். இதனைச் செருகற்குறி என்பர். 2. மேற் கோளாகக் காட்டும் ஒரு தொடரில் வேண்டாத பகுதிகள் இருந்தால் அதனை நீக்கி விடுகிறோம். அவ்வாறு நீக்கும்பொழுது சொற்கள் நின்ற பகுதியில் ‘............’ இவ்வாறு தொடர்புள்ளிகள் இட்டோ ‘***’ இவ்வாறு உடுக்குறிகளிட்டோ காட்டுகிறோம். விடுபட்ட சொற்களை இக்குறியீடுகள் காட்டுவ தால், இவை விடுபாட்டுக் குறிகள் எனப்படும். 9. மரபு முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லாற் குறித்தார்களோ, அப்பொழுளை அச்சொல்லாற் குறிப்பதே மரபாகும். அவ்வாறு |