பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்175

ஆலை வாய்ப்பட்ட கரும்பு போல
இலவு காத்த கிளிபோல
இருதலைக் கொள்ளி எறும்பு போல
உள்ளங்ககை நெல்லிக் கனி போல
ஊமை கண்ட கனவு போல
எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தாற் போல
கதிரவனைக் கண்ட தாமரை போல
கடன்பட்டார் நெஞ்சம் போல
குடத்துள் இட்ட விளக்குப் போல
தாமரை இலைத் தண்ணீர் போல
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல
வெந்த புண்ணிலே வேல் நுழைந்தாற் போல

பழமொழிகள் : நம் முன்னோர் தம் வாழ்நாளிற் கண்ட பல பேருண்மைகளைத் திட்ப நுட்பம் செறிந்த சிறு தொடர்களால் கூறியுள்ளனர். அவற்றை இற்றை நாளில் பழமொழிகள் எனவழைக்கி றோம். பேச்சிலும், எழுத்திலும் பழமொழிகளைப் பயன்படுத்துதல் அழகும், செறிவும் தருதலின், கீழே தரப்பட்டுள்ள பழமொழிகளை மாணக்கர் பயன்படுத்தி நலம் பெறுவாராக.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம்.
அகத்தின் அழகு முகத்திலே தெரியும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.
ஆனைக்கும் அடி சறுக்கும்.
இக்கரைக்கும் அக்கரை பச்சை,
உப்பிட்ட வரை உள்ளளவும் நினை.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?
குறை குடம் ததும்பும்; நிறை குடம் ததும்பாது
கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.