பக்கம் எண் :

176கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

கைக்கெட்டியது வாய்க்கெட்ட வில்லை.
பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்.
பதறாத காரியம் சிதறாது.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பொறுத்தார் பூமி யாள்வார்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

11. உவமை உருவக மாற்றம்

அறிந்த பொருளைக் கொண்டு அறியாத பொருளை உணர்த்தலே உவமையின் நோக்கம் என்று குறிப்பிட்டோம். இவ்வாறு வரும் உவமைகளை உருகங்களாகவும் மாற்றிக் கூறலாம். ஆதலின் உவமை, உருவகம் ஆகிய இரண்டின் இயல்புகளையும், அற்றை மாற்றும் முறைகளையும் பற்றிக் காண்போம்.

“தாமரை முகம்” இது ‘தாமரை போன்ற (மலர்ந்த) முகம்’ என விரியும். இத்தொடர் உவமானம், உவமேயம், உவம உருபு, பொதுத்தன்மை என்ற நான்கு உறுப்புக்களைக் கொண்டுள்ளது. இங்கே, தாமரை: உவமானம்; முகம்; உவமேயம்; போன்ற; இரண்டையும் ஒப்பிடும் உவம உருபு; மலர்ச்சி; இரண்டிற்கும் உள்ள பொதுத்தன்மை ஆகும். உவமத் தொடரில் உவமானம் முன்னும், உவமேயம் பின்னுமாக வரும்.

உவமையை உருவகமாக மாற்றல்:

இவ்வுவமைத் தொடரை உருவகத் தொடராக மாற்ற வேண்டு மானால், உவம உருபாகிய “போன்ற” என்ற சொல்லை நீக்கி, உவமையாகிய தாமரையின் தன்மையைப் பொருளாகிய முகத்தின் மீது ஏற்றி “முகத்தாமரை” என மொழிதல் வேண்டும். இவ்வாறு வரும் இத்தொடரை விரித்தால், “ஆகிய” என்னும் பண்புருபு மறைந்து நிற்பது புலனாகும். இவ்வாறு மாற்றும்பொழுது உவமேயம் முன்னும், உவமேயமாகிய “தமிழை” இறுதியில் வைத்தும், இடையில் “போன்ற” என்ற உவம உருபை விரித்தும் எழுதின் “தேன்போன்ற (இனிய) தமிழ்” என உவமைத் தொடராக மாறும்.

கீழே தரப்பட்டுள்ள உவமைகளையும், உருவகங்களையும் பிரித்தெடுத்து மாற்றி எழுதிப் பயில்க.

பவளவாய், முகமதி, பாதமலர், பால்போலும் இன்சொல்.