பக்கம் எண் :

178கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

எ-டு:இனி + செல்க=இனிச் செல்க

தனி + பாட்டு=தனிப்பாட்டு

மற்று + காண்க=மற்றுக்காண்க

மற்ற + பாடம்=மற்றப்பாடம்

மற்றை + செல்வம்=மற்றைச் செல்வம்

6. உவமைத் தொகை சிலவற்றில் வல்லினம் மிகும்.

எ-டு:மலர் + கண்=மலர்க்கண்

வேய் + தோள்=வேய்த்தோள்

தாமரை + கண்=தாமரக்கண்

7. இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

எ-டு:சாரை + பாம்பு=சாரைப் பாம்பு

சித்திரை + திங்கள்=சித்திரைத் திங்கள்

8. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்னும் வல்லினம் மிகும்.

எ-டு:நில்லா + பொழுது=நில்லாப் பொழுது

ஓடா + புலி=ஓடாப்புலி

9. தனிக்குறுலைச் சார்ந்த முற்றுகரங்களின் முன் வல்லினம் மிகும்.

எ-டு:புது + பார்வை=புதுப் பார்வை

உரு + கண்டான்=உருக்கண்டான்

வடு + பட்டது =வடுப்பட்டது

10. தீ, பூ, ஈ என வரும் ஒரெழுத்தொருமொழியின் முன்னும் வல்லினம் மிகும்.

எ-டு:தீ + பாய்ந்தான்=தீப்பாய்ந்தான்

பூ + பறித்தாள்=பூப்பறித்தாள்

ஈ + கால்=ஈக்கால்

11. ஆய், போய், அன்றி, இன்றி, ஆக, என என்னும் வினை யெச்சங்களின் முன்னும், சில அகர ஈற்று வினையெச்சங் களின் முன்னும், இகர ஈற்று இறந்த கால வினையெச்சங்களின் முன்னும் வல்லினம் மிகும்.